விஸ்வகர்ம ஜெயந்தி விழா
ADDED :1844 days ago
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில், நேற்று முன்தினம் தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரவை சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.நிறுவனத்தலைவர் ஜம்புகேஸ்வரன் தலைமை வகித்தார். பேரவையின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வேத மந்திரங்கள் முழங்க, வேள்வி சாலையில் யாகங்கள் நடத்தப்பட்டன. இதில், நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.