கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :1899 days ago
சேலம்: சிவதாபுரம் அருகே இனாம் வேடுகத்தாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 2ம் ஆண்டு புரட்டாசி பிரம்மோற்ச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, கருட வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு, முகக் கவசம் அணிந்து வழிப்பட்டனர்.