அயோத்தி ராமர் கோவில் செல்லும் ராட்சத வெண்கல மணி: பொதுமக்கள் தரிசனம்
ADDED :1899 days ago
கடலுார்; அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட உள்ள 613 கிலோ எடை கொண்ட ராட்சத வெண்கல மணியை கடலுாரில் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு வழங்க ராமேஸ்வரத்தில் லீகல் ரைட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் 613 கிலோ எடையில் ராட்சத வெண்கல மணி தயாரிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரையாக மணியை அயோத்தி கொண்டு செல்லும் குழுவினர் நேற்று முன்தினம் கடலுார் வந்தனர். கடலுார் டவுன்ஹால் முன்பு ராட்சத வெண்கல மணி பொதுமக்கள் தரிசனத்திற்காக நேற்று காலை வைக்கப்பட்டது. பொதுமக்கள் தரிசனத்திற்கு பிறகு ரத யாத்திரை புறப்பட்டுச் சென்றது.