கல்விக்கு அதிபதியான கலைமகளின் குரு யார்?
ADDED :1849 days ago
எல்லாம் வல்ல பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணனின் அம்சமே ஹயக்ரீவர். அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரமாகவும், தூய பளிங்கு போன்றவரும், தனது கணவர் நான்முகர் பிரம்மாவின் தந்தையுமான ஸ்ரீமந் நாராயணனின் அம்சமான ஹயக்ரீவர், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் குருவாகப் போற்றப்படுகிறார். கடவுளர்களின் தன்மைகளைப் பொறுத்தும், செயல்களைப் பொறுத்தும்,அவரவர்களின் ஸ்தானங்களிலும் மாறுதல் இருக்கும். ஆகவே, தெய்வங்களில் பெரியது என்றோ சிறியதோ என்று சர்ச்சை செய்யாமல், நமக்குரிய பிரார்த்தனைகளை நமக்குப் பிடித்தமான தெய்வங்களின் வாயிலாகச் சமர்ப்பித்து நற்பலன்களை அடைதல் வேண்டும்.