கிராம கோயில் பூஜாரிகள் நலச்சங்க கூட்டம்
ADDED :1852 days ago
கடலாடி : கடலாடியில் உள்ள பாதாள காளியம்மன் கோயில் வளாகத்தில் கிராம கோயில் பூஜாரிகள் நலச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.மாநிலத் தலைவர் பி.வாசு முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கூரியைய்யா வரவேற்றார். மாநில பொருளாளர் சுந்தரம், கடலாடி மாடசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.தீர்மானம்: ஆன்லைன் மூலமாக கிராம பூஜாரிகள்நலவாரியத்தை அரசு இயக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட முதிய பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக வழங்க வேண்டும். பூஜாரிகளின் ஆண்டு வருமானச்சான்றை ரூ.72 ஆயிரமாக உயர்த்தியதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நலவாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.