உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தங்க கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் மகோற்சவம் நடந்து வருகிறது. அதனையொட்டி கடந்த 18ம் தேதி காலை 6.30 மணியளவில் மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் இரவு 8 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அம்சவாகன உற்சவம் துவங்கியது.

19ம் தேதி 2ம் நாள் சுவாமி சந்திரபிரபை உற்சவத்திலும், 20ம் தேதி 3ம் நாள் அனுமந்த வாகனத்திலும், 21ம் தேதி 4ம் நாளில் ஷேசவாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். 5ம் நாளான நேற்று இரவு 7.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தங்க கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று(23ம் தேதி) 6ம் நாள் யானை வாகன உற்சவத்திலும், நாளை 7ம் நாள் சுவாமிக்கு திருகல்யாயணம் நடக்கிறது. 25ம் தேதி 8ம் நாள் குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி 9ம் நாள் திருத்தேரில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 27ம் தேதி 10ம் நாள் காலை தீர்த்தவாரி உற்சவமும். மாலை 6 கொடியிரக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !