அன்பே வெல்லும்
ADDED :1844 days ago
ஒரு முறை சபைக்கு போதகர் தேவைப்பட்டது. இரண்டு பேர் விண்ணப்பித்தனர். ஒருவர் அதிகமான ஆண்டுகள் படித்த பண்டிதர், நல்ல பேச்சாளர், ஆனால் தற்பெருமை கொண்டவர். மனதில் அன்பு இல்லாதவர். மற்றவரோ அவ்வளவு படித்தவர் இல்லை. பேச்சு சாதுர்யமும் இல்லை. ஆனால் அன்பால் அனைவரையும் அரவணைப்பவர். அடக்கம் உடையவர். சபையினர் இரண்டாவது நபரையே தேர்வு செய்தனர். அறிவாற்றலை விட அன்பே ஆண்டவருக்கு பிரியமானது.