புரட்டாசி சனி வழிபாடு: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED :1843 days ago
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப்பெருமாள் கோயில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜ பெருமாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து, சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில், அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப்பெருமாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காரமடையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.