பஞ்சாயுத சேவையில் சுந்தரராஜப் பெருமாள்
ADDED :1918 days ago
பரமக்குடி: பரமக்குடியில் புரட்டாசி இரண்டாவது சனி வாரத்தையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உற்சவர் பஞ்சாயுத சேவையில் அருள்பாலித்தார்.