கள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் உலா
ADDED :1866 days ago
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசித்திபெற்ற முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.