உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

அன்னூர்: மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில் உள்ள மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் அஷ்டமி விழா நடந்தது. இரவு 7:30 மணிக்கு வேள்வி யாகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, சுவான பூஜை நடந்தது. இரவு 8:30 மணிக்கு மகா பைரவருக்கு, நவ அபிஷேகம் மற்றும் கலச தீர்த்த வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !