ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள்
ADDED :1932 days ago
திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த, 17ம் தேதி, நவராத்திரி உற்சவம் துவங்கியது. வரும், 25ம் தேதி வரை நடைபெறும் உற்சவ நாட்களில், தாயார் சன்னதியில் இருந்து புறப்பாடாகும் ரெங்கநாச்சியார், கொலு மண்டபத்தில் எழுந்தருளி, அருள்பாலித்து வருகிறார். நவராத்திரி உற்ஸவத்தில் நேற்று மாலை கருடமண்டபத்தில், தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.