மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1831 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1831 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி 2ம் சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு நடைதிறக்கபட்டு சுப்ரபாதபூஜை, சிறப்பு திருமஞ்சன அபிேஷகங்கள், அலங்கார பூஜைகளை ஸ்ரீனிவாசராமபட்டர், பத்ரிபட்டர் செய்தனர். தொடர்ந்து காலை 3:30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். மொட்டை, தானியங்களை வழங்கியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.இது போல் திருத்தங்கள் நின்ற நாராயணபெருமாள், விருதுநகர் ராமர் கோயில் பத்மாவதிதாயார் சமேத சீனிவாச பெருமாள், ரெங்கநாதர், வாலசுப்பிரமணிசுவாமி கோயில் பாலாஜி கோயில் என மாவட்டத்தில் அனைத்து பெருமாள் கோயில்களில் நடந்த வழிபாடுகளிலும் பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
1831 days ago
1831 days ago