முத்துமாரியம்மன் கோவிலில் செடல்பெண்கள் பால்குட ஊர்வலம்
ADDED :4903 days ago
பண்ருட்டி:கொக்குப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி கடந்த 17ம் தேதி காலை 5 மணியளவில் நிலை அம்மனுக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு பொன்னு ஐய்யனார் கோவிலில் இருந்து 100 பெண்கள் பால்குடம் ”மந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. வரும் 25ம் தேதி காலை 7 மணிக்கு கரகம் புறப்பாடு, பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4.30 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிகிறது.