உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி வாராஹி கோயில் கும்பாபிஷேகம்

ஆதி வாராஹி கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை : மோர்பட்டி ஊராட்சி கோப்பம்பட்டியில் ஆதி வாராஹி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் விநாயகர் வழிபாட்டுடன் யாக பூஜைகள் துவங்கின. நேற்று காலை யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கெட்டியபட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயில் அர்ச்சகர் குமாரசாமி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !