தர்மமுனீஸ்வரர் கோயில் பொங்கல் விழா
ADDED :1876 days ago
முதுகுளத்துார் : சிறுமணியேந்தல் தர்மமுனீஸ்வரர் கோயில் புரட்டாசி திருவிழாவான சந்திமறிப்பு பொங்கல் விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். விநாயகர் கோயிலிருந்து வேல்குத்தி, அக்கினிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் அம்மன் கோயில் முன்பு பூக்குழி இறங்கினர்.அம்மனுக்கு பால்அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்பு தர்மமுனீஸ்வரர் கோயில் முன் கிராமமக்கள் பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக்கடன் செய்தனர்.