முத்துமாலை கொடுத்த பக்தை
ADDED :1828 days ago
ஏழுமலையானின் பக்தையான வேங்கமாம்பா, பெற்றோரின் வற்புறுத்தலால் வெங்கடாஜலபதி என்பவரை திருமணம் செய்தார். ஆனால் குடும்ப வாழ்வில் அவருக்கு ஈடுபாடு இல்லை. துறவறம் பூண்டு ஏழுமலை மீதுள்ள தும்புரு தீர்த்தக்கரையில் தனித்து வாழ்ந்து அங்கேயே சமாதியானார். இவரது சமாதி திருமலை வடக்கு வீதியில் உள்ளது. திருப்பதியில் அபிஷேகத்திற்காக உருவாக்கப்பட்ட போகசீனிவாசருக்கு இவர் முத்து மாலை ஒன்றை தானமாக கொடுத்துள்ளார். வெங்கடேச மகாத்மியம், தத்வ கீர்த்தனம், கிருஷ்ண மஞ்சரி, நரசிம்ம விலாசம், பாலகிருஷ்ண நாடகம் ஆகியவை இவரால் பாடப்பட்டவை.