தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
ADDED :1927 days ago
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவில். அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து கோவில்களையும் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கம் போல பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புரட்டாசி மாத பிரதோஷத்தை, சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.