மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1826 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1826 days ago
திருப்பதி அருகிலுள்ள நாராயணபுரத்தை ஆட்சி செய்தவர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் ஒருநாள் திருப்பதி மலை மீதுள்ள வேங்கடாத்ரிக்கு யானை வேட்டைக்குச் சென்றார். வழியில் பஞ்சவர்ண கிளி ஒன்றைக் கண்டார். அதைப் பிடிக்க முயன்ற போது, ‘வெங்கடேசா...கோவிந்தா’ என்னும் திருநாமத்தை சொல்லியபடி பறந்தது. மன்னரும் அதைப் பின்தொடர்ந்தார். திருப்பதி கோயில் அருகிலுள்ள சுவாமி புஷ்கரணி என்னும் குளத்தை அடைந்ததும் கிளியைக் காணவில்லை. குளக்கரையில் ஏழுமலையான் சிலையாக நின்று அருள்புரிவதைக் கண்ட மன்னர் அதிசயித்தார். கிளியாக வந்தது கடவுள் என்பதை அறிந்த தொண்டைமானே திருப்பதி கோயிலைக் கட்டினார்.
1826 days ago
1826 days ago