மருந்து கடவுளையும் வணங்குங்க!
ADDED :1865 days ago
மருத்துவக் கடவுளான தன்வந்திரி, விஷ்ணுவின் அவதாரம் ஆவார். புரட்டாசி சனிக்கிழமையன்று இவரையும் வணங்கலாம். இவருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள திருமங்கை மன்னன் பிரகாரத்தில் (ஆலிநாடன் திருவீதி) சன்னிதி இருக்கிறது. காஞ்சிபுரத்திலுள்ள தேவப்பெருமாள் கோவில் பிரகாரத்திலும், சென்னை கந்தாஸ்ரமத்திலும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை பைபாஸ் ரோடை ஒட்டிய, சொக்கலிங்கநகர் பகவத்சிங் தெருவில் (பொன்மேனி மெயின் ரோடு) தன்வந்திரி கோவில் உள்ளது.