உங்கள் பெயர் நிலைக்கட்டும்!
ADDED :1859 days ago
மனிதன் பிறக்கிறான், இறக்கிறான். ஆனால், உலகத்துக்காக என்ன நல்லதைச் செய்து விட்டுப் போனான்! ராஜராஜசோழன் சோழநாட்டை என்றோ ஆண்டான். ஆயிரக்கணக்கில் ஆண்டுகள் கழிந்த பிறகும், அவன் பேர் சொல்ல தஞ்சை பெரியகோயில் இருக்கிறது. அவனது மகன் ராஜேந்திரசோழன், கங்கைகொண்ட புரத்திலே ஒரு கோயிலைக் கட்டினான். அதுவும் நிலைத்து நிற்கிறது. அவர்கள் மன்னர்கள், செல்வந்தர்கள். ஏழையாய் இருந்தால் கூட, அவரவர் தகுதிக்கு ஏதோ ஒரு நல்லதைச் செய்யலாம். காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிதுஎன்கிறார் வள்ளுவர். ஒரு குடும்பத்துக்கு நீங்கள் செய்யும் உதவி கூட காலம் காலமாக அவர்களால் பேசப்படும். அப்படி ஒரு நற்செயலைச் செய்தால். உங்கள் பெயரும் அவர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.