கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தெப்போற்சவம் கோலாகலம்
ADDED :1831 days ago
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, தெப்போற்சவம் கோலாகலமாக நடந்தது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியாக தெப்போற்சவம் நேற்று நடந்தது. அதில் வரதராஐ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார். இன்று இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.