சிறுமலை மாதா ஆலய தேர்பவனி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
ADDED :4900 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கிருஷ்ணன் கோயில் சிறுமலை மாதா ஆலய விழா தேர்பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணன் கோயில் சிறுமலை மாதா ஆலய விழா கடந்த 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, தினம் சிறப்பு திருப்பலி , பிரார்த்தனை, ஜெப வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாவது நாள் தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அமலி அன்னை எழுந்தருள,தேரானது சர்ச் வளாகம் வழியாக ஜெபக்கூடம் வந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். வ. புதுப்பட்டி பாதிரியார் மார்ட்டின் ஜோஸ், உதவி பாதிரியார் பாப்புராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. பல்வேறு மறைமாவட்ட ஆயர்கள், பாதிரியார்கள் கலந்து கொண்டனர். உலக நன்மை , மக்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடந்தது.