வெங்கடாஜலபதி அலங்காரத்தில் சின்னாளபட்டி ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
ADDED :1835 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், புரட்டாசி 3வது சனியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அஷ்டோத் திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.