கோவை பெருமாள் கோவில்களில் வழிபாடு
ADDED :1833 days ago
கோவை: பெருமாள் கோவில்களில் நேற்று, புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, உக்கடம்லட்சுமி நரசிம்மர் கோவில், கோட்டை கரிவரதராஜபெருமாள் கோவில், சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, பாப்பநாயக்கன் சீனிவாசபெருமாள், உள்ளிட்ட கோவில்களில், அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.காலை திருப்பல்லாண்டு, திருவாய்மொழி பாராயணம் நடந்தது. மாலை நாமசங்கீர்த்தன பஜனை உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளிய பெருமாளை வழிபட்டனர்.