திருக்காமீசுவரர் கோவிலில் தேர்த்திருவிழா!
புதுச்சேரி:வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலின் தேர்த் திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தேர்த்திருவிழா வரும் 24ம் தேதி இரவு 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரம்மோற்சவம் 24ம் தேதி முதல் அடுத்த ஜூன் 4ம் தேதி வரை நடக்கிறது. வரும் 25ம் தேதி ரிஷப வாகனம், மயில் வாகனம், இந்திர விமானத்திலும், 26ம் தேதி ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறும். 31ம் தேதி மாலை 4 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவமும், இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறும். ஜூன் 1ம் தேதி காலை 7.15 மணியளவில் திருத்தேர் விழா நடைபெறும்.2ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும், 3ம் தேதி முத்துப்பல்லக்கு உற்சவமும், 4ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் நிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.