உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாத்திகுளத்தில் மழை கஞ்சி வழிபாடு

விளாத்திகுளத்தில் மழை கஞ்சி வழிபாடு

 துாத்துக்குடி; மழை வேண்டி, விளாத்திகுளம், கே.குமாரபுரத்தில், பொதுமக்கள் மழை கஞ்சி வழிபாடு நடத்தினர்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதி யில், ஆவணியில் பெய்த மழையை நம்பி, விவசாயிகள் பயிரிட தொடங்கினர். தற்போது, மழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.எனவே, மழை வேண்டி பொதுமக்கள் விளாத்திகுளம், கே.குமாரபுரத்தில் மழை கஞ்சி வழிபாடு நடத்தினர். இதன்படி, ஆண்களும், பெண்களும் வேடமிட்டு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கிராமிய பாடல்கள் பாடியபடி வீடு வீடாக சென்றனர்.வீடுகளில் கம்மங்கஞ்சி, சோளக் கஞ்சி, அரிசி சோறு ஆகியவற்றை சேகரித்து, அங்குள்ள பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின், பொதுமக்களுக்கு வழங்கி, ஒன்றாக உணவருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !