கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் ஜப்பான் சிந்தோ மதகுரு வழிபாடு
ADDED :248 days ago
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் பழமையான சிந்தோ மதத்தை சேர்ந்த மதகுரு கோகான் மருஹிக்கோ வழிபாடு செய்து பொதுமக்களுக்கு பிரசதாம் வழங்கினார். இயற்கையில் இறைவன் இருக்கிறான் என்ற கோட்பாட்டின் படி பஞ்சபூத சிவ தலங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நடராஜர் வழிபாடு செய்து வரும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் குறித்து தாய்லாந்து மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சென்று போது அங்கு வரலாற்று எச்சங்கள் பார்த்து வியந்த அவர் கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவிலில் நேரில் வந்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார்.