பசி பொறுப்பவர் மீது யாருக்கு பிரியம்?
ADDED :1839 days ago
பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள். பசியை யாரொருவன் பொறுத்துக் கொள்கிறானோ அவனுக்கு இறையருள் உண்டு. “ஒருவனுக்கு பசி ஏற்பட்டாலோ, தேவை ஏற்பட்டாலோ அதைப் பகிரங்கப்படுத்தாமல் மக்களிடம் மறைத்து விடுவானாகில் ஒரு வருடம் ஹலாலான உணவை அவனுக்கு கொடுப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்,” என்கிறார் நாயகம். பசித்தவர்களுக்கு இறைவன் நிச்சயம் உணவளிப்பான். பசிக்கிறதே என அடுத்தவர்களிடம் உணவு கேட்காதீர்கள். “ஒருவன் யாசகத்தின் (கைநீட்டுதல்) ஒரு கதவைத் திறந்தால், அல்லாஹ் அவன் மீது ஏழ்மையின் எழுபது கதவுகளைத் திறந்து விடுகிறான்,” என்றும் நாயகம் சொல்கிறார். கை நீட்ட நீட்ட வறுமை தான் பெருகும்.