கந்தனது வேலிலும் ஆறு கோணம்!
ADDED :1838 days ago
வெற்றிவேல்!
விஷ்ணுவுக்கு சுதர்சன சக்கரம் எதிரிகளை அழிக்கப் பயன்படுகிறது. அதற்கு சகஸ்ரநாமமும் உண்டு. ஹோமமும் செய்வார்கள். பில்லி, சூன்யம், எதிரிகளை அழிக்க சுதர்சன வழிபாடு செய்வர். அதேபோன்று எதிரிகளை அழிக்க கந்தனுக்குத் துணையிருப்பது வேல். வேல் விருத்தம், வேல் வகுப்பு, வேல் மாறல் என்றெல்லாம் வேலுக்கு அபிஷேக பூஜை, வழிபாடுகள் செய்து துதிப்பர்.
வேலுண்டு வினையில்லை;
குஹணுண்டு குறைவில்லை
என்பது மகாமந்திரம். சுதர்சன சக்கரத்தில் ஆறு கோணங்களைக் காணலாம். அதேபோன்று கந்தனது வேலிலும் ஆறு கோணம் (ஷண்முக சக்கரம் ) காணலாம்.