சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கிறதா?
ADDED :1838 days ago
நல்லதெல்லாம் இருக்குமிடம் சொர்க்கம். சுவர்க்கம் என்பதே சொர்க்கம் என்றாகி விட்டது. சு என்றால் நல்ல. வர்க்கம் என்றால் பெருக்கம், கூட்டம், சேர்க்கை என்று பொருள். நல்லவற்றின் சேர்க்கையை சொர்க்கம் என்கிறார்கள். நரகம் என்றால் தரமற்றது, கீழானது என்று பொருள். குணத்தால் கீழானவர்கள் இருக்குமிடம் நரகம். இந்த இரண்டுமே இருக்கிறது என்கிறது தர்ம சாஸ்திரம். அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கு தக்கவாறு உயிர்கள் அங்கு சென்றடைகின்றன.சிவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தே நவக்கிரகங்கள் நமக்கு நன்மை, தீமையை வழங்குகின்றன. சிவபூஜை செய்ததன் பயனாகவே அவை கிரகப் பதவியை அடைந்திருக்கின்றன. அதனால், நவக்கிரகங்களை சிவனடியவர்களாகக் கருதியே வழிபாடு செய்ய வேண்டும்.