கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?
ADDED :1837 days ago
அன்றாட வழிபாடு, திருவிழா போன்ற பூஜை காலத்தில் அர்ச்சர்கள், பக்தர்களால் கோவிலுக்குள் அறிந்தோ, அறியாமலோ வழிபாட்டில் குற்றம், குறை நேர வாய்ப்புண்டு. இவற்றைப் போக்குவதற்காக இறைவனின் விக்ரஹம், கர்ப்ப கிரகத்தில் சாந்நித்யம் என்னும் அருட்சக்தி நிலைத்திருக்க 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஆகம சாஸ்திரம் கூறுகிறது.