இருவகை கோயில்கள்
ADDED :1926 days ago
சுவாமி, அம்மன் இருவருக்கும் தனித்தனி சன்னிதி, கொடிமரம், பலிபீடம், பிரகாரம், திருவிழா ஆகியவை உள்ள பெரிய கோயில்கள் ’ஸ்வதந்திர ஆலயம்’ எனப்படும். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ள கோயில்களில் இருவருக்கும் சேர்த்து ஒரே பிரகாரம் இருக்கும். சுவாமிக்கு மட்டும் கொடிமரம், பலிபீடம் இருக்கும். இந்த வகை கோவில் ’கூடஸ்த ஆலயம்’ எனப் பெயர் பெறும்.