நவசக்தி வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு ஆராதனை
ADDED :1866 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வராகி மந்திராலயத்தில் நவசக்தி வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
உலக மக்களின் நலன் வேண்டியும், கொரோனா என்னும் கொடிய நோய் இவ்வுலகை விட்டு அகல வேண்டும் எனவும், நவசக்தி வராகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், சகஸ்ரநாம பாராயணம் பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியையொட்டி, வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில், பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.