அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.77.59 லட்சம் காணிக்கை
ADDED :1820 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு பிறகு, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 77.59 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். ஆனால், கடந்த மார்ச், 24 முதல், கொரோனா ஊரடங்கால், கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. அதனால் கடந்த ஆறு மாதமாக, உண்டியல் எண்ணப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம், 1ல் இருந்து கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து, உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், பக்தர்கள், 77 லட்சத்து, 69 ஆயிரத்து, 894 ரூபாய், 266 கிராம் தங்கம், 561 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.