லண்டனில் ஹிந்துக்களுக்கு எதிரான புத்தகம் வாபஸ்
ADDED :1820 days ago
லண்டன்: பிரிட்டனின் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மதம் தொடர்பான பாடத் திட்டம் இடம்பெற்றுள்ளது. அதில் ஹிந்து மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:நமக்கு சரி என்று தெரிந்தால், போரும் புரியலாம் என்று ஹிந்து மதம் நம்பு கிறது. அதனால் தான், இந்தியா அணு ஆயுதங்களை தயாரித்துள்ளது. ஹிந்துக்கள் சிலர், ஹிந்து மதத்தை பாதுகாக்க பயங்கரவாத வழியைப் பின்பற்றுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, பிரிட்டன் ஹிந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, இந்தப் புத்தகம், பாடத் திட்டத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.