உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனிஆண்டவர் கண் திறந்தார் : திரண்ட பக்தர்களால் பரபரப்பு

பழனிஆண்டவர் கண் திறந்தார் : திரண்ட பக்தர்களால் பரபரப்பு

கோவை: மசக்காளிபாளையத்திலுள்ள பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள முருகன் சிலை கண் திறந்ததாக பரவிய தகவலை தொடர்ந்து, பரபரப்பு ஏற்பட்டது.


மசக்காளிபாளையத்திலுள்ளது பழனிஆண்டவர் கோவில். இங்கு வழக்கமாக காலை மற்றும் மாலை நேரத்தில், அபிஷேக ஆராதனைகள் பழனிஆண்டவருக்கு பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும்.நேற்று காலை அபிஷேகத்துக்கு பின், கோவிலில் உள்ள பழனிஆண்டவர் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, பழனியாண்டவருக்கு சகல திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு வழிபாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கந்தசஷ்டி, கந்தர்அனுபூதி ஆகியவற்றை பாராயணம் செய்தனர். தகவலறிந்த மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள பக்தர்கள், பெருமளவில் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !