உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பக்தர்களுக்கு தடை

ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பக்தர்களுக்கு தடை

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்காவில், மகா வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை என்பதால், 10 ஆயிரம் பக்தர்களுக்கு மேல், வர வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா சமூக இடைவெளி கடைப்பிடிக்க இயலாதென, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு, இதுகுறித்து கோவில் வளாகத்தில், அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !