திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி விழா அக்.17ல் துவக்கம்
ADDED :1825 days ago
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா அக்., 17 ல் துவங்குகிறது.
கொரோனா தொற்றால் இந்தாண்டு நவராத்திரி விழா நடக்குமா என பக்தர்கள் எதிர்பார்த்தனர். கோயில் நிர்வாகம் சிவாச்சார்யார்களுடன் ஆலோசனை நடத்தி கொலு அலங்காரம் செய்யவும், விழாவின் கடைசி நாளன்று தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்தில் சென்று அம்பு போடும் நிகழ்ச்சியை ரத்து செய்யவும், பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள் நடத்தவும் முடிவு செய்தது.அக்., 17 முதல் 25 வரை கம்பத்தடி மண்டபத்தில் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் அருள்பாலிப்பார் என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.