உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள்

 விழுப்புரம்; வளவனுாரில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நான்காவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அலங்கரிக்கப்பட்டு, கனகவல்லி தாயாரோடு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, 10:00 மணிக்கு சுவாமி சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !