கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு தாமரை, முல்லை, மல்லிகை, செவ்வந்தி, சம்பங்கி,துளசி உள்ளிட்ட பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூபபூஜைகளை தொடர்ந்து அர்ச்சனைகள் ஆராதனைகள் தீபாரதனை நடைபெற்றது. இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.