உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுருளி அருவியில் கோடி லிங்கம் கோயில் பணி தீவிரம்

சுருளி அருவியில் கோடி லிங்கம் கோயில் பணி தீவிரம்

கம்பம்:சுருளி அருவியில் கோடிலிங்கம் கோயில் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சுருளி அருவியில் 10 ஆண்டுகளுக்கு முன் கம்பத்தை சேர்ந்த கணேசன் கோடிலிங்கம் கோயில் கட்டுமான பணி துவக்கினார். தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்கின்றனர். சிவலிங்கம் இங்கு தரப்படும். வெளியிலிருந்து கொண்டுவர அனுமதியில்லை. இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 72 அடிஉயர சிவலிங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் உட்புறத்தில் தியானம் செய்ய மண்டபம் அமைக்கப்படுகிறது. சுருளி மலை அடிவாரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த கோடிலிங்கம் கோயில் மன அமைதி தரும் இடமாக மாறி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !