நட்பு விஷயத்தில் உஷார்
ADDED :1870 days ago
நட்பு என்பது உயர்வான விஷயம். நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீதே நட்பு என்ற கட்டிடம் எழுப்பப்படுகிறது. அதில் நயவஞ்சகம் என்னும் விஷத்தை கலக்கக் கூடாது. உங்களைச் சுற்றியும் நயவஞ்சகர்கள் சிலர் இருக்கலாம். அவர்களிடம் உஷாராக இருப்பது நல்லது. இளைஞன் ஒருவன் தன்னுடன் பழகியவனை நண்பன் என நம்பி அழைத்து வந்தான். அவனும் நல்லவன் போல இளைஞனின் வீட்டாரின் நம்பிக்கையைப் பெற்றான். இதைப் பயன்படுத்தி ஒருநாள் வீட்டிலுள்ள பொருட்களை சுருட்டிக் கொண்டு ஓடினான். பின்னர் வருந்துவதில் யாருக்கு லாபம்? இப்படிப்பட்ட நயவஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ‘‘தொழுகையில் மும்முரமாக ஈடுபட்டாலும் வஞ்சகன் வஞ்சகன் தான். நல்லவர்கள் தம் நாவினாலும், கைகளாலும் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள்’’ என்கிறார் நாயகம்.