உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் முன்மண்டபம் புதுப்பிக்க நடவடிக்கை தேவை

செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் முன்மண்டபம் புதுப்பிக்க நடவடிக்கை தேவை

 செஞ்சி; செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் முன் உள்ள கல்மண்படத்தை புதுப்பிக்க இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.700 ஆண்டுகள் பழமையான செஞ்சி கோட்டை மற்றும் அதை சுற்றி உள்ள மலை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் சில வற்றில் மட்டுமே தற்போது வழிபாடு நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் அதிகம் வரும் கோவிலாக செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு முன் 200 ஆண்டு வயதுடைய பெரிய ஆலமரம் இருந்தது. ஆஞ்சநேயர் கோவில் மண்டபம் முழுவதையும் மறைத்து படர்ந்து வளர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிழல் தந்து வந்தது. இந்த ஆலமரம் கடந்த 2012ம் ஆண்டு புயல் மழையின் போது வேறோடு சாய்ந்தது.இதன் பிறகு நிழல் இல்லாமல் பக்தர்கள் கல்பதித்த தரையில் நின்று சாமி தரிசனம்செய்கின்றனர். வெயில் நேரத்தில் இதில் நின்று சாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்யும் இடத்தில் இருந்த கல்மண்டபத்தை படையெடுப்பின் போது அடித்து உடைத்து விட்டனர்.இந்த மண்டத்தின் துாண்கள் மட்டும் எஞ்சிநிற்கின்றன.இடிக்கப்பட்ட மற்ற கற்கள் அதே பகுதியில் சிதறிகிடக்கின்றன. இதே போல் சிவன் கோவில் பகுதியில் இடிந்து இருந்த மண்டபத்தைஅதே பகுதியில் சிதறி கிடந்த கற்களை கொண்டும், பற்றாக்குறை ஏற்பட்ட கற்களை புதிதாகவும் வைத்து சிவன் கோவில் மண்டபத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறையினர் புதிப்பித்தனர்.வழிபாடு இல்லாத சிவன் கோவில்மண்டபத்தை சரி செய்ததை போல், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தையும் புதுப்பிக்க இந்தியதொல்லியல் துறையினர் நடவடக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !