உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி :நாதஸ்வரம் வாசித்து கோரிக்கை மனு

கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி :நாதஸ்வரம் வாசித்து கோரிக்கை மனு

 உடுமலை:கோவில் திருவிழாக்களில், பாரம்பரிய கும்மியாட்டம், கரகாட்டம்உள்ளிட்ட நிகழ்ச்சி இடம்பெற அனுமதி வேண்டி, இன்னிசை இசைத்து கோரிக்கை வைத்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், 5,000க்கும் அதிகமான, இசை கலைஞர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.தமிழகத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற பரிந்துரைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இதனை இசைக்கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இசைக்கலைஞர்கள், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கருவிகளை இசைத்து, இன்னிசை வாயிலாக கோரிக்கை விடுத்தனர்.மனுவில், தமிழக அரசு, கிராமப்புற இசை கலைஞர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய உதவிகேட்டு பல இடங்களில் விண்ணப்பித்தும் உதவி இல்லை. மாதாந்திர ஓய்வூதிய உதவி வழங்க வேண்டும்.தகுதியான கலைஞருக்கு கலை மாமணி விருது வழங்கி, நாட்டுப்புற கலையை கவுரவிக்க வேண்டும். மாவட்டம் தோறும் கலைஞர்களை தேர்வு செய்து, இலசமாக இசை கருவிகளை வழங்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !