மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :4898 days ago
மங்கலம்பேட்டை : கோ.பூவனூர் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல், செடல் உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணியளவில் பூவனூர் ஏரியிலிருந்துசக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் காவடி, அலகு குத்தி, செடல் அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. வரும் 26ம் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், சுவாமி வீதியுலா நடக்கிறது.