உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி பூஜைக்கு அனுமதி இல்லை

சுகவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி பூஜைக்கு அனுமதி இல்லை

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், நவராத்தி பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம், சுகவனேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அக்., 17(நாளை) முதல், 26 வரை நடக்க உள்ள நவராத்திரி விழா பூஜை, அபி ?ஷகத்தின் போது, பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அபி?ஷகம், பூஜை நிறைவடைந்த பின், சுவாமி, அம்பாள் தரிசனம் செய்ய, பக்தர்கள் உரிய இடைவெளியோடு அனுமதிக்கப்படுவர். விபூதி, குங்கும பிரசாதம் தனித்தனி பொட்டலங்களில் வைத்து, சுவாமி சன்னதி முன்புறமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !