சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா ரத்து
ADDED :1852 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி 10 நாட்கள் நவராத்திரி உற்ஸவ விழா நடக்கும்.நாள்தோறும் மண்டகபடிதாரர்களால் நவராத்திரி கொலு உற்ஸவ வழிபாடு நடைபெறும். பத்தாம் நாளில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மங்கம்மாள் கேணி சென்று பாரிவேட்டை, அம்பு வீசும் நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு தற்போதைய கொரோனா தொற்று பிரச்னையால் நவராத்திரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.