அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
ADDED :1894 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கமலா நகர், செல்லியம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா துவங்கியது.விழாவையொட்டி, மூலவர் செல்லியம்மன் பாலாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
கோவில் பிரகாரத்தில், நவராத்திரி கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டன.சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு இன்று, முப்பெரும்தேவி மணப்பெண் அலங்காரமும், தொடர்ந்து லட்சுமி சீனுவாசன், அன்னபூரணி, மாவடி சேவை, அம்மன், விநாயகர், முருகர் என நாள்தோறும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 22ம் தேதி மச்சக்கன்னி, தொடர்ந்து தீப்பாஞ்சாள் அம்மன், பெருமாள், அம்மன், சரஸ்வதி, இறுதியாக 26ம் தேதி ஆதிபராசக்தி அலங்காரமும் நடைபெறுகிறது.