உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் நடப்பட்டது

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா,  14 .12. 2020 முதல் 04.01.2021 வரை  நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபம் அருகில், கோயில் இணை ஆணையர் திரு.ஜெயராமன் முன்னிலையில், பக்தர்கள் யாரும் இன்றி முகூர்த்தக்கால் நடப்பட்டது.  வைகுண்ட ஏகாதசி பெருவிழா 14.12 .2020 அன்று திருநெடுந்தாண்டகமும் , 15.12.2020 முதல் 24.12.2020 வரை பகல் பத்து திருவிழாக்களும் , 24.12.2020 அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கியத்  திருநாளான பரமபத வாசல் திறப்பு 25.12 .2020 வெள்ளிக்கிழமை காலை  04.45மணி அளவிலும் ,31.12 .2020 ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும் ,01.01.2021 அன்று திருமங்கை மன்னன் வேடபரி திருவிழாவும்.03.01.20221அன்று தீர்த்தவாரியும், 04.01 2021 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச்சமும் நடைபெறும் . ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உற்சவத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !